Saturday, December 25, 2010

பத்தகோனாசனா

பத்தகோனாசனா

பத்தா’ என்றால் பிடிப்பு, பந்தம் என்று பொருள். “கோன” என்றால் கோணம்.
செய்முறை
1. தரையில் கால்களை முன் நீட்டிக் கொண்டு உட்காரவும். முதுகெலும்பு நேராக நிமிர்ந்திருக்கட்டும். கால்கள் சேர்ந்து இருக்கட்டும். கைகளை பக்கவாட்டில் தொங்க விட்டு உள்ளங்கைகளை தரையில் வைத்துக் கொள்ளவும்.
2. கால்களை மடித்து உடலருகே கொண்டு வரவும். இரு கால்களின் குதிகால்கள், உள்ளங்கால் ஒன்றையன்று தொட்டுக் கொண்டு இருக்கும் படி வைத்துக் கொள்ளவும்.
3. தொடைகளை விரித்து முழங்கால்களை தரையை தொடுமாறு கீழே இறக்கவும்.
4. பாதங்களை, இரு கைவிரல்களை பின்னிக் கொண்டு, பிடித்துக் கொள்ளவும்.
5. மூச்சை வெளியே விட்டுக் கொண்டு, முன்னுக்கு வளைந்து, மூக்கு, நெற்றி தரையை தொடுமாறு குனியவும்.
6. நார்மலாக மூச்சு விட்டுக் கொண்டு இந்த நிலையில் 1/2 (அ) 1 நிமிடம் இருக்கவும்.
7. மூச்சை உள்ளிழுத்து, உடலை தரையிலிருந்து எடுத்து, நார்மல் நிலைக்கு வரவும்.
பலன்கள்
1. பெண்களுக்கேற்ற சிறந்த ஆசனம். சிறுநீர் தொற்று, மாதவிடாய் கோளாறுகளை நீக்கும். ஒவரிகளின் (ளிஸ்ணீக்ஷீவீமீs) செயல்பாட்டை சீர் செய்யும்.
2. பாலியல் செயல்பாடுகள் சரியாக இயங்க உதவும். விந்து முந்துதலை சரி செய்யும். செக்ஸ் குறைபாடுகளை போக்க சிறந்த ஆசனம்.
3. சிறுநீரக கோளாறுகளை போக்கும்.
4. கால்களின் தசைகளை வலுப்படுத்தும்.
எச்சரிக்கை
1. முழங்கால், மூட்டு வலி உள்ளவர்கள் தவிர்க்கவும்.
2. முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More