யோகாவின் நோய்களை குணமாக்கும் தன்மை
யோகா என்றால் என்ன?
யோகா என்பது ஒழுக்கம் என்ற பொருளைக் குறிக்கும். நாம் நமது மனதைக் கட்டுப்படுத்தி நம் உள்ளே இருக்கின்ற ‘இறை சக்தி’யை அல்லது ‘இறை தன்மை’யை அறிய உதவும் பயிற்சி தான் யோகாப் பயிற்சியாகும்.
முறையாகத் தொடர்ந்து செய்யப்படும் யோகா மூளைக்கு சீரான இரத்த ஒட்டத்தையும் மூளைக்கு புத்துணர்ச்சியையும் தரக் கூடியது. இதனால் மூளையில் செயல் திறன் அதிகரிக்கின்றது. உடலின் செயல்பாடுகள் சீராகுகின்றன. இதன் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கின்றது.
தூக்கமின்மை, ஒய்வின்மை கவனக் குறைவு குழப்பமான மனநிலை தேவையற்ற பயம் ஆகியவை மூளையின் செயல்பாட்டிற்கு இடையூறு தரக் கூடியவை. யோகா இவற்றை போக்கி இத்தகைய பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான மனநிலையையும் நல்ல மூளைச் செயல்பாட்டையும் ஞாபக சக்தியையும் தருகின்றது.
உலகளவில் கிட்டத்தட்ட எல்லா வெளிநாடுகளிலும் யோகாவின் நன்மைகளைப் புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பித்துள்ளனர். ஜெர்மனியில் எட்டுப் பேரில் ஒருவர் யோகாப் பயிற்சி செய்பவராக இருக்கின்றார். நார்வே ஸ்வீடன் போன்ற நாடுகளிலும் மக்கள் அதிகமாக யோகாப் பயிற்சி மேற்கொள்கின்றனர். அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உடற்பயிற்சி போல யோகாப் பயிற்சி அளிக்கப்படுகின்றது.
உலகம் முழுவதும் பரவி இன்று உலக மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள யோகக் கலையின் பிறப்பிடம் நம் இந்தியா என்பதில் அனைத்து இந்தியர்களும் பெருமைப்படலாம். நம் நாட்டில் பல்லாயிரம் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ரிஷிகளும், முனிவர்களும் தொடர்ந்து மேற் கொண்ட தவத்தில் கிடைத்த பொக்கிஷம் தான் யோகக் கலை.
யோகக் கலையின் நோக்கம் மனிதனுக்கு உடல், பிராண சக்தி, மனம், புத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படச் செய்து ஆரோக்கியம் நிம்மதி மற்றும் சந்தோஷத்தைக் கொடுப்பதே ஆகும்.
யோகக் கலையின் முக்கியத்துவமே மூச்சுப் பயிற்சியில் தான் அடங்குகின்றது. மூச்சுப் பயிற்சி சீராக சீராக உடலின் இயக்கங்கள் சீராகும். இதனால் உடலின் அனைத்து உறுப்புகளும் வலுப் பெறும்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது மனம் ஆரோக்கியமாக இருக்கும். நமது மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது செயல்பாடுகள் ஆரோக்கியமாக நன்மையைத் தரும் விதமாக அமையும் யோகா என்பது நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான ஒர் ஒப்பற்ற பயிற்சியே ஆகும்.
உச்சநிலையை அடைந்தவுடன் எத்தனை முறை மூச்சை உள்வாங்கி வெளி விடுகிறோம் என்பது மட்டும் தான் கணக்கு. ஒவ்வொரு ஆசனத்தின் உச்சநிலையிலும் குறைந்தது 10 – 12 முறையாவது மூச்சை உள்வாங்கி வெளி விடுவது அவசியம். முன் புறம் குனிந்த நிலையில் உச்சநிலையில் ஒரிரு எண்ணிக்கைகளை வேண்டுமானால் குறைத்துக் கொள்ளலாம்.
யோக சிகிச்சையின் சிறப்பு அம்சங்கள்
• இதர மருந்து முறைகளுடன் இணைந்து செய்யலாம். சில வியாதிகளுக்கு குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கு அலோபதி சிகிச்சையுடன் யோக சிகிச்¬யும் மேற்கொண்டால் சிறந்த பலனை பெறலாம். யோகா செய்யும் முன் உங்களின் டாக்டரையும், யோகா நிபுணரையும் கலந்தாலோசித்து செய்தால் நல்லது.
• நோய் ஏதும் இல்லாமலிருக்கும் போதே யோகாப்யாசம் செய்தால் வியாதிகளை தடுக்கலாம். நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம். மனமும் அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கும். 30 லிருந்து 40 வயதுக்குள் யோகாவை பயின்று செயல்படுத்துவது நல்லது.
• யோகா மனித வாழ்வின் ஐந்து “கவச உறைகளை” குறிப்பிடுகிறது. அவை
1. உடல்
2. பிராணன் (நாடிகள் வழியே பெருகும் ஜீவசக்தி)
3. மனது, எண்ணங்களும், உணர்ச்சிகளும் உண்டாகுமிடம்
4. ஞானம், அறிவு
5. ஆத்மா, பரமானந்த நிலை. முதல் மூன்று நிலைகள் பாதிக்கப்பட்டால் உடலின் சக்தி உடலெங்கும் சரிவர பரவாது. நோய்கள் தோன்றும்.
• நமது துயரங்களுக்கெல்லாம் காரணம். புலனேந்திரியங்களுக்கு அடிமையாகி, கோப, காமக்குரோதங்கள், பணத்தாசை பிடித்து அலைவது. ஆனால் நம்முன் உறையும் ஆத்மாவை, அறிந்து கொண்டால், மன, உடல் நோய்கள் மறையும். இதற்கு உதவுவது யோகப் பயிற்சி.
யோகப் பயிற்சிகள் கீழ்க்கண்டனவற்றை அங்கமாக கொண்டுள்ளன.
1. நற்காரியங்கள் (சத்கிரியா) இதனால் உள்ளமும் உடலும் தூய்மை அடைகின்றன. இதன் விவரங்கள் “சத்கர்மங்கள்” என்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளன.
2. யோகாசனங்கள் – உடலின் உள்ளுறுப்புகள், தசைகள் இவற்றுக்கு வலிமை சேர்க்கின்றன.
3. பிராணாயாமா – ‘பிராண’ சக்தியை உடலெங்கும் பரவ செய்யப்படும் ‘மூச்சுக்’ கட்டுப்பாடு.
4. தியானம் – தன்னைத் தானே அறிய உதவும் தியானம் மன அமைதியை தரும்.
5. யோக முத்திரைகள் யோகாவின் ஒரு பாகம். இந்த முத்திரைகள் உடலில் நாளமில்லா சுரப்பிகள் இருக்கும் இடத்திலேயே சுரூபமாக இருப்பவை. யோக முத்திரை பயிற்சிகள் இவற்றை ஊக்குவிக்கும்.
அதீத உடல் பருமன், ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு யோகா ஒரு
வரப்பிரசாதம்.
யோகத்தை பயின்று கடைப்பிடிக்க நம்பிக்கையும் மன உறுதியும் தேவை. பயின்ற பின் கிடைக்கும் பலன்கள் உடல், உள்ளங்களின் முழு ஆரோக்கியம்.
ஆசனங்கள் தீர்க்கும் வியாதிகள்
வியாதிகள் ஆசனங்கள்
உயர் ரத்த அழுத்தம் பச்திமோஸ்த்தாசனம், மஸ்யாத்சனம், சசாங்காசனம், சவாசனம்.
தாழ்நிலை ரத்த அழுத்தம் பாவமுத்தாசனம், மஸ்யாத்சனம், சவாசனம்.
அதிக அமில சுரப்பு பச்திமோத்தாசனம், பாவமுத்தாசனம், சர்வங்காசனம்.
மூலம் பச்சிமோத்தாசனம், வஜ்ராசனம், மயூராசனம், சசாங்காசனம், ஹலாசனம், சங்வங்காசனம்.
மலச்சிக்கல் பத்மாசனம், ஹலாசனம், சக்கராசனம், சர்வங்காசனம், தனுராசனம், புஜங்காசனம், சலபாசனம், மண்டூகா சனம்
அஜீரணம் பத்மாசனம், வஜ்ராசனம், மண்டூகாசனம்.
நீரிழிவு பத்மாசனம், ஹலாசனம், சக்கராசனம், சலபாசனம், தனுராசனம், மஸ்யேந்திராசனம், பச்சிமோத்தாசனம், மயூராசனம்.
தொடர் ஜலதோஷம், இருமர் மஸ்யாத்தாசனம், சலபாசனம், தனுராசனம், பச்சிமோத்தாசனம், உஷ்ட்ராசனம்.
ஆஸ்த்துமா பச்சிமோத்தாசனம், சசாங்காசனம், மஸ்த்யாசனம், ஹலாசனம், சக்கராசனம், புஜங்காசனம், சவாசனம்.
ஆர்த்தரைடீஸ் சேதுபந்தாசனம், தடாசனம், சலபாசனம், தசாங்காசனம்.
இதய நோய்கள் தடாசனம், சலாபாசனம், புஜங்காசனம், சவாசனம்.
ருமாட்டிசம் சலபாசனம், புஜங்காசனம், பச்சிமோத்தாசனம்.
பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் ஹலாசனம், தனுராசனம்.
யோகாவின், நோய்களை, குணமாக்கும், தன்மை,
யோகா, என்றால், என்ன,
யோகா, மூளை, இரத்த, ஒட்டத்தையும், மூளைக்கு, புத்துணர்ச்சியையும், உடலின், ஞாபக, சக்தி, யோகா, ஆரோக்கியமான, உலகளவில், வெளிநாடுகளிலும், யோகாவின், ஜெர்மனியில், யோகாப், பயிற்சி, நார்வே, ஸ்வீடன், நாடுகளிலும், மக்கள், மருத்துவ, மனைகளிலும், உடற்பயிற்சி, யோகாப், பயிற்சி, உலகம், யோகக், கலையின், இந்தியா, இந்தியர்களும், பெருமைப்படலாம், நாட்டில், ஆண்டுகளுக்கு, ரிஷிகளும், முனிவர்களும், யோகக், கலை, மனிதனுக்கு, உடல், பிராண, சக்தி, மனம், ஆரோக்கியம், மூச்சுப், பயிற்சி, உடல், ஆரோக்கியமாக, மருந்து, வியாதிகளுக்கு, உயர், ரத்த, அழுத்தம், நீரிழிவு, நோய்களுக்கு, டாக்டரையும், யோகா, ஞானம், அறிவு, யோகப், பயிற்சி, சத்கர்மங்கள், உடலின், உள்ளுறுப்புகள், பிராணாயாமா, தியானம், யோக, முத்திரைகள், யோகாவின், உடல், பருமன், ஆஸ்த்துமா, நோயாளிகளுக்கு, யோகா ஆரோக்கியம் மூலம்.....
0 comments:
Post a Comment