Saturday, December 25, 2010

யோக முத்ரா

                                                             யோக முத்ரா
செய்முறை:பத்மாசன நிலையில் உட்கார்ந்து கொண்டு கைகளை மிக இளக்கமாக முதுகுக்குப் பின்புறம் கட்டிக் கொள்ளவும். நாடி மெதுவாக வெளியே விட்டவாறே முன் நெற்றி தரையில் தொடும்படி மெதுவாகக் குனியாவும். சில வினாடி இந்நிலையில் இருந்தபின் தலையை நேராக முன்போல் நிமிர்த்தவும். நிமிரும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு இவ்வாசனத்தை பயிலலாம். ஒரு முறைக்கு 20 வினாடியாக 5 முறை செய்யலாம். தரையை நெற்றியால் தொட முடியாதவர்கள் முடிந்த அளவு முயிற்சித்துவிட்டு, விட்டுவிடவும், கொஞ்ச நாளில் முழு நிலை அடையலாம்.

பலன்கள்: முதுகின் தசை எலும்புகள், வயிற்று உறுப்புகள் புத்துணர்வு பெறும். கல்லீரல், மண்ணீரல் அழுத்தமடைந்து நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் நீங்கும். தாது இழுப்பு, பலக்குறைவு நீங்கும், நீரழிவு நோய் நீங்கும், தொந்தி கறையும். முதுகெலும்பு நேராகும். அஜீரணம், மலச்சிக்கல் ஒழியம். நுரையீரல் நோய்க் கிருமிகள் நாசமடையும்.


பெண்களின் மாதவிடாய் நோய்கள் நீங்கும். வயற்றில் ஆபரேஷன் செய்திருந்தால் 6 மாதம் இவ்வாசனம் செய்யக் கூடாது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More