Thursday, December 23, 2010

நின்ற பாத ஆசனம்

                                                       நின்ற பாத ஆசனம்
இவ்வாசனம் சிரசாசனம், அர்த்த சிரசாசனம் இவற்றிற்கு மாற்று ஆசனம். ஒற்றைக் காலில் நிற்பது. வலது காலில் நின்று கொண்டு இடது காலை மடக்கி குதிகாலை வலது தொடை மேல் வளைத்து ஆசனவாயில் படும்படி நிறுத்த வேண்டும். இரு கைகளையும் உயரே முடிந்த அளவு உயர்த்திக் கும்பிட வேண்டும். கையை விறைப்பாக வைக்கக் கூடாது. பின் இடது காலில் நிற்க வேண்டும். முறைக்கு 1 நிமிடமாக 2 முதல் 4 முறை செய்யலாம். நின்று கொண்டு காலை பத்மாசனத்திற்குப் போடுவது போன்றும் செய்யலாம். மூச்சு சாதாரணமாக விடலாம். பழங்காலக் கோவில்களில் இதுபோன்ற ஆசன நிலையில் உள்ள சிற்பங்கள் பல காணலாம்.

பலன்கள்:இவ்வாசனம் பார்வைக்கு மிக இலகுவாகத் தோன்றினாலும் இதன் பலன் மிக அதிகம். தியானம், மன ஒருமைப்பாடு, திடசிந்தனை இவைகளுக்கு சிறந்த ஆசனம். வாதம், நரம்புத் தளர்ச்சி, சோம்பேறித்தனம் இவைகள் ஒழியும். மனச் சஞ்சலம் ஒழியும். திடமனது ஏற்படும். காரியங்களைச் செம்மையாக முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பயம் ஒழியும். ரத்த ஓட்டம் சீர்படும். மன அமைதி பெறும். சஞ்சலங்கள் ஏற்படாது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More